துருக்கியில் தற்கொலை படை தாக்குதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

chennaiதுருக்கியில் தற்கொலை படை தாக்குதல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அனுமதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள். இதில் 41 பேர் பலியானார்கள்.இதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உளவுத்துறை உஷார்படுத்தியது.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மீனம்பாக்கம் உதவி கமிஷனர் நடேசன், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையில் போலீசார் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார், வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அனுமதிக்கின்றனர். விமான நிலைய போர்டிக்கோ பகுதியில் மத்திய தொழிற்படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பார்வையாளர்கள் அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த பாதுகாப்பு பணிகள் வரும் 5 நாட்கள் அமலில் இருக்கும். எனவே விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply