ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொலை
ஈராக்கின் ஃபலூஜா பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 250 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஃபலூஜாவிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறிக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியை அந்நாட்டு ராணுவ உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தலைநகர் பாக்தாத் அருகிலுள்ள ஃபலூஜா நகரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து ஈராக் படையினர் முற்றிலும் மீட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்தாக்குதலை அமெரிக்க படையினர் மேற்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply