மத்திய வங்கி ஆளுநர் பதவி: மைத்திரி – ரணிலுக்கு இடையில் மோதல்?
மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரனின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.புதன்கிழமையன்று காலையில் பதுளையில் வைத்து இன்னும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.எனினும் இரண்டு நாட்களாகியும் இன்னும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. அவரது பதவி காலத்தை நீடிப்பதற்கு அல்லது வேறு ஒருவரை நியமிப்பதற்கு மேலும் தாமதமாகும் என ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு அரசாங்க அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
இவ்வாறான மாறுபட்ட கருத்தின் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஆளுநராக தமது சிரேஸ்ட ஆலோசகர் ச்சரித்த ரத்வத்தை நியமிக்கவேண்டும் என்று கோருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் உதவி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை புதிய ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.
அரசியலமைப்பை பொறுத்தவரையில் ஜனாதிபதியினால் யாரையும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கமுடியும். அவ்வாறு நியமித்தால், அரசாங்கத்துக்குள் பாரிய நெருக்கடி நிலை உருவாகலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமரின் தெரிவான ச்சரித்த ரத்வத்தை நாளை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் கோப் குழு தகவல் வட்டாரங்களுக்கமைய மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று கோப் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply