சைபீரியாவில் ரஷிய தீயணைப்பு விமானம் மாயம்
ரஷியாவின் நெருக்கடி கால அமைச்சகத்துக்கு சொந்தமான தீயணைப்பு விமானம் ஒன்று சைபீரியாவில் மாயமாகிவிட்டது. அங்குள்ள இர்குத்ஸ்க் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற ரஷியாவின் விமானம், லேக் பைக்கால் என்ற இடத்துக்கு அருகே நேற்று நடுவானில் மாயமானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 4 என்ஜின்களை கொண்ட இந்த விமானம், 42 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்திறனை கொண்டதாகும். விமானத்தில் 10 சிப்பந்திகள் இருந்தார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
அந்த விமானத்தை தேடும் பணியில் 7 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்த விமானம், தீயணைப்பு பணிக்காக புறப்பட்டு சென்றபோது அதில் பழுது எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply