ஈராக்கில் நடந்த பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் உயிரிழப்பு; ஐ.எஸ். பொறுப்பேற்பு
ஈராக்கில் நடந்த பயங்கர தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் பகுதியில் பயங்கர தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதலில் 75 பேர் உயிரிழந்து உள்ளனர். 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டியான ரமலான் கொண்டாடப்படும் நிலையில், பொருட்கள் வாங்க மக்கள் கூடிய மார்க்கெட் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply