சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்
சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.சவுதி அரேபியாவின் செங்கடல் நகரான ஜெட்டாக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. தற்கொலை தாக்குதலை நடத்தியவர் குண்டு வெடித்ததில் உயிரிழந்துவிட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இரண்டு போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இன்று தனது சுதந்திர தினநாளை கொண்டாடும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு படையினர் தற்கொலை தாக்குதல் நடத்திய பகுதியினை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உள்ளனர். ஜெட்டாக்கில் உள்ள அமெரிக்க தூதரம் முன்னதாக காரில் வந்தவர் தற்கொலை தாக்குதலை நடத்திஉள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க தூதரகம் குறிவைக்கப்பட்டு உள்ளநிலையில் சவுதியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இருந்தோ, சவுதி அரேபியா உள்துறையிடம் இருந்தோ தாக்குதல் தொடர்பாக உடனடியாக எந்தஒரு பதிலும் வெளியாகவில்லை. ஜெட்டாக் குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கு தகவல் தெரியும்,அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக முழு தகவல்களை பெற சவுதி அரேபியா அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஜெட்டாக்கில் அமெரிக்க தூதரகம் மீது அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அப்போது அமெரிக்கா மற்றும் சவுதியை குறிவைத்து பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர். சமீபத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கும் சவுதி இலக்கு ஆகிஉள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகள் படையில் சவுதி அரேபியாவும் இணைந்து தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவுடன் நட்புறவு பாராட்டும் சவுதி அரசையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் எதிரியாகவே பார்க்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் உள்துறை மந்திரி தகவல்கள் அளிக்கையில் சவுதியில் கடந்த இரண்டு வருடங்களில் 26 பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என்றார். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் சிறுபான்மை ஷியாக்கள் மற்றும் பாதுகாப்பு படையை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply