மத்திய வங்கியின் நம்பிக்கையைப் பாதுகாப்பேன் :புதிய ஆளுநர்
இலங்கை மத்திய வங்கியின் கீர்த்தி நாமங்களுடனும் நம்பிக்கையுடனும் கொண்டு நடாத்துவதற்கு தேவையான அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக இலங்கை மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று தெரிவித்துள்ளார்.தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபுர்வ அறையில் வங்கியின் ஊழியர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போது ஆளுநர் இதனைக் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் கௌரவத்தைப் பாதுகாத்து, அதன் நற்பெயருக்கு நம்பிக்கையுட்டும் விதமாக அதனைக் கொண்டு நடாத்துவது ஆளுநரின் பிரதான பணியாகும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை சகலரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply