தனிப்பட்ட மின்னஞ்சல் பயன்படுத்திய விவகாரம்: ஹிலாரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ எந்த குற்றச்சாட்டையும் பரிந்துரைக்கவில்லை
அமெரிக்காவில் 2009-13 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன்.வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, தனது தனிப்பட்ட இமெயில் கணக்கினை அரசு பணிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹிலாரி கிளிண்டன், “தனிப்பட்ட இமெயில் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் நான் இரண்டு இமெயில் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணி தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது தவறுதான். அதற்காக நான் வருந்துகிறேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அரசு அலுவல்களுக்கு தனது தனிப்பட்ட ‘இமெயில்’ முகவரியை பயன்படுத்தியது தொடர்பாக அவரது அரசியல் எதிரிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த இமெயில் சர்ச்சை தொடர்பாக ஹிலாரியிடம் விசாரணை நடத்தி அவரை அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
இதுதொடர்பாக, ஹிலாரியின் அரசு உதவியாளர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு போலீசார் (எஃப்.பி.ஐ) ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டன் மீது புலனாய்வு போலீசார் குற்றச்சாட்டு எதனையும் பரிந்துரை செய்யவில்லை.
மின்னஞ்சல் விவகாரத்தில் கிளாரி அதிக அளவில் கவனக்குறைவாக இருந்ததை புலனாய்வு போலீசார் கண்டுபிடித்தனர். இருப்பினும் குற்றச்சாட்டு எதனையும் பதிவு செய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் இறுதி முடிவை நீதித்துறை தான் எடுக்கும் என்று, கிளாரி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதை அங்கு தெரிவிப்போம் என்று புலனாய்வு அமைப்பு இயக்குநர் காமே தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply