சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: ராம்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விலகல்

kirushnamoorthyசுவாதியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாக வாதாடுவதில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வழக்குகளை சாதி, இன அடிப்படையில் உணர்ச்சிப்பூர்வமாக கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ராம்குமார் வழக்கில் நேரடியாக தனக்கு தொடர்பில்லை என்று கூறியுள்ள கிருஷ்ணமூர்த்தி, வேறொரு வழக்கறிஞர் தன்னிடம் உதவி மட்டுமே கேட்டதாகவும் கூறியுள்ளார்.

ராம்குமாருக்கு ஜாமீன் பெற்றுத் தர மட்டுமே தன்னிடம் அந்த வழக்கறிஞர் உதவி கேட்டதாகவும், ஜாமீன் கோரும் வழக்கின் விசாரணையில் ஆஜராவது விடுதலைக்காக ஆஜராவதாக ஆகிவிடாது என்றும் தெரிவித்துள்ளார். நலிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி, எப்போதுமே தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக தான் போராடி வருவதாகவு‌ம் கூறியுள்ளார்.

எனினும், வழக்கின் தற்போதைய சூழ்நிலையைக் கருதி அதிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply