சில்காட் அறிக்கை குறித்து பதிலளிக்க வேண்டியது பிரிட்டனே, நாங்கள் அல்ல: அமெரிக்கா
நேற்று வெளியாகியுள்ள சில்காட் அறிக்கை குறித்து அமெரிக்க அரசு துறை பேச்சாளர் ஜான் கிர்பி கூறுகையில், இது குறித்து பதிலளிக்க வேண்டியது பிரிட்டனே தவிர, அமெரிக்கா அல்ல என்று கூறியுள்ளார்.தற்போது இராக்கில் உள்ள நிலைமை மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளை தோற்கடிப்பதிலும்தான் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது என்றும், 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் கவனம் இல்லை என்றும் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இராக் போரில் ஈடுபட்ட போது நிகழ்ந்த உளவுத்துறை ரீதியான தோல்விகள் மற்றும் இதர தவறுகளை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஏற்கனவே ஒப்புக் கொண்டாலும், முன்னாள் இராக் தலைவர் சதாம் ஹுசைன் இல்லாத இந்த உலகம் சிறப்பாகவே உள்ளது என்று புஷ் தொடர்ந்து நம்புவதாக, ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சாளர் ஒருவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply