சீனாவில் சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி

China சீனாவின் லியானிங் மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் கடந்த திங்கட்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 500 மீட்டர் ஆழத்திற்குள் 13 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று(வெள்ளிக்கிழமை) 9 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. 

 

மொத்தம் இந்த தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் மேலும் ஒருவர் சுரங்கத்திற்கு சிக்கி இருக்கலாம் என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சீனாவில் தான் உலக அளவில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் அங்கு நிலக்கரிச் சுரங்க விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

 

முன்னதாக சீனாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply