கூட்டு எதிரணியின் நிழல் அமைச்சரவையிலிருந்து மஹிந்த இராஜினாமா

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் நிழல் அமைச்சரவையில் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். கூட்டு எதிரணி தனது நிழல் அமைச்சரவைக்காக நேற்று பல்வேறு நியமனங்களை வழங்கியிருந்தது. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதவியும் பாதுகாப்பு, புத்தசாசன அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தன.

 

எனினும் மஹிந்த ராஜபக்ஷ் எதற்காக இப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

 

அரசாங்கத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சையும் கண்காணிக்கும் எம்.பியாக தன்னை நியமிக்குமாறே மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இதேவேளை, நீர் விநியோகம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

இது குறித்து கேட்டபோது; கூட்டு எதிரணியின் நிழல் அமைச்சரவை குறித்து தான் அறிந்துவைத்திருக்கவில்லையென அவர் தெரிவித்தார்.

 

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த பலர் நிழல் அமைச்ரவை நியமனங்கள் குறித்து ஏற்கனவே அறிந்துவைத்திருக்க வில்லையென நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இதேவேளை இலங்கையில் எதிர்க்கட்சி நிழல் அமைச்சரவையை அமைத்து செயற்படுவது முதற்தடவை இல்லையென மஹிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 

அரசாங்கத்தில் உள்ள அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், அவற்றில் இழைக்கப்படும் தவறுகள், வீண்விரயங்களைக் கண்காணிக்கும் நோக்கில் ஒவ்வொரு அமைச்சுக்கும் கண்காணிப்பு எம்பிக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

இலங்கையில் இதற்கு முன்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிழல் அமைச்சரவை அமைத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்திருந்தனர். எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் மாத்திரமன்றி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

 

நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஒவ்வொரு அமைச்சுக்கும் கண்காணிப்பு எம்பிக்கள் நியமிக்கப்பட்டு ஒரு நாள் பூர்த்தியடைவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் தம்மைத் தொடர்புகொள்ளத் தொடங்கியிருப்பதாகவும், சகலருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

நிழல் அமைச்சரவையின் ஆலோசகராக, பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டிருப்பதுடன், சகல உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பை வழங்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்ததாகவும் அழகப்பெரும கூறினார்.

 

ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டிருக்கும் துறைகள் குறிப்பிடப்பட்ட கடிதமொன்றை தினேஷ் குணவர்த்தன வழங்கியிருப்பதாகவும், அதில் உள்ள விடயதானங்களுக்கு அமைய சகலரும் செயற்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply