மங்களவுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி

MANGALAஜனாதிபதியின் கருத்தை சவாலுக்கு உற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கும் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவியிலிருந்து விலகவேண்டும் அல்லது விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி வலியுறுத்தியது. நீதிப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி பல தடவைகள் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருப்பது அமைச்சரவை சம்பிரதாயம், சட்டம் என்பவற்றை மீறும் வகையிலானது என மஹிந்த ஆதரவு அணியின் பாராளுமன்ற உறுப்பினர் (ஒன்றிணைந்த எதிர்க்கட்சி) தினேஷ் குணர்வத்தன தெரிவித்தார்.

 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செயற்பாடானது பாரிய பிழையாகும். இதனை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு எதிரணியில் உள்ள எம்பிக்கள் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நீதிபதிகளைக் கோருகின்றனர். ஜனாதிபதி சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லையென்கிறார்.

 

தான் இந்த இரண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவில் இருக்கின்றேன் என மங்கள சமரவீர கூறியுள்ளார். எனினும், அரசியலமைப்பின் படி அதற்கு இடமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். யார் என்ன கூறினாலும் அரசியலமைப்பின் படி எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியையும் நியமிக்க இடமில்லை” என்றும் தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.

 

அரசியலமைப்பில் என்ன உள்ளது என்பதை முதலில் வெ ளிவிவகார அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி அமைச்சரவை உறுப்பினர் என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்பிலிருந்து மங்கள சமரவீர விலகியுள்ளார். இது விடயத்தில் ஜனாதிபதியின் தலையீட்டை எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக் கூறிய வாசுதேவ நாணயக்கார, அமெரிக்காவின் பிரேரணையில் அமைச்சர் மங்கள சமரவீரவும் கையெழுத்திட்டுள்ளார். இதனை நிறைவேற்றுமாறு அமெரிக்கா தற்பொழுது அவருடைய கழுத்தை நெரிக்கிறது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு முரணான கருத்தைக் கூறும் அமைச்சர் நீக்கப்பட வேண்டும் என்றார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply