மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்கா: மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அங்கு தென்னாப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஸுமா, துணை அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனைதொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்களை மோடி சந்தித்து பேசினார். அதன் விவரம்:
தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறவெறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டாலும் கலை கலாச்சாரத்தை முன்னோர்கள் பாதுகாப்பு வந்தனர்
உலக பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறது. இந்திய மக்கள் அனைவரும் நேர்மையான சிந்தனையுடன் செயல்படுகிறோம். வரும் ஆண்டுகளில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளோம்
தென் ஆப்பிரிக்காவில் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். 1.25 பில்லியன் இந்தியர்களின் சார்பாக நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நாம் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், நம்முடைய முன்னோர்கள் தனித்து நின்று வந்துள்ளனர். நம்முடைய பொதுவான பாரம்பரியம் நம்முடைய இதயத்தையும், மூலையையும் பிணைப்பில் வைத்துள்ளது.
உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது, உங்களது முன்னோர்களையும் அவர்களது போராட்டத்தை நினைவு கூர்கிறேன். அவர்களது தைரியத்தையும் நினைவு கூர்கிறேன்.
1991-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தனது போட்டியை அந்த அணி இந்தியாவில் தான் விளையாடியது.
நிறவெறி கடைபிடிக்கப்பட்ட காலத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை புறக்கணித்திருக்கிறது. பின்னர் அவர்களை அன்புடன் வரவேற்றது.
இந்தி, தமிழ், குஜராத், உருது மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் தென் ஆப்பிரிக்கா சமுதாயத்தில் தொடர்ந்து வளப்படுத்தப்பட்டுள்ளது.
காந்தியடிகள் தன்னுடைய அரசியல் கருத்தாக்கத்தை இங்கிருந்து தான் தொடங்கினார். சத்தியாகிரத்தின் பிறப்பிடம் இது தான். மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்காவில் தான்.
இவ்வாறு மோடி பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply