06 மாதம் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானமே நிழல் அமைச்சரவை:டளஸ்

dalasகடந்த 06 மாத காலமாக கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள உறுப்பினர்களிடையே கலந்துரையாடிய பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றே இந்த நிழல் அமைச்சரவை என நிழல் அமைச்சரவையின் கல்வி மற்றும் பாராளுமன்ற விவகார பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.இக்கலந்துரையாடல்களின் போது தமக்கு விருப்பமான அமைச்சுக்கள் பற்றியும் உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு புதிய விடயமல்ல. கடந்த சிறிமா பண்டாரநாயக்க காலத்திலும், ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இதனைப் போன்று அமைச்சரவையொன்று அமைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டமை தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் தங்களுக்கு எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply