இடம்பெயர்ந்த மாணவர்க்கு பாடப் புத்தகங்கள், சீருடை நலன்புரி நிலையங்களில் இன்று விநியோகம்:கல்வி அமைச்சு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பன இன்று  வவுனியா நலன்புரி கிராமங்களில் வைத்து விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.சுமார் 10 ஆயிரத்து 200 மாணவர்களுக்குத் தேவையான 60 ஆயிரம் புத்தகங்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் முதலாம் தரத்தில் இருந்து 11 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்குத் தேவையான 86 வகை புத்தகங்கள் அடங்குவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். அவை காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மேலதிக களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவை மோதல் காரணமாகவும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்ததன் காரணமாகவும் காணாமல் போயிருக்கலாம் என கல்வி அமைச்சு கூறியது. வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கென மெனிக்பாம் பகுதியில் ஏற்கனவே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply