பயங்கரவாதத்தை ஒருபோதும் நான் ஆதரித்தது இல்லை: இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் விளக்கம்

bangalaவங்காளதேச குண்டு வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், தான் எந்த வடிவிலும் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை எனவும், இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது. இதற்கிடையே, நேற்று இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்த ஜாகீர் நாயக் தனது பயணத்தை ரத்து செய்தார்.

இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜாகீர் நாயக் பயங்கரவாதத்தை நான் ஒரு போதும் ஆதரித்தது இல்லை என்று என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- “ இந்திய அதிகாரிகள் என்னிடம் இருந்து தகவல்களை பெற விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எந்த வடிவிலான வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு நான் ஒரு போதும் ஆதரவு அளித்தது கிடையாது. எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் நான் ஆதரித்தது கிடையாது.

எனது கருத்துக்களை சூழலுக்கு மாறாக பயன்படுத்தவும் எந்த வடிவிலான வன்முறைக்கு பயன்படுத்த எடுத்துக்கொள்ளவும் நான் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சில தினங்களில் எனக்கு உரிய நேரம் கிடைத்தால், குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் நான் பதிலளிப்பேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply