சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு

China சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் வான் பாதுகாப்பு வளையம் அமைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்று சீனா கூறுகிறது.சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தென் சீனக்கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு சீனா செயற்கை தீவுகளையும், ராணுவ நிலைகளையும் அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.அதே நேரத்தில் தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரத்தில் தனது உரிமையை நிலை நாட்டுவதற்கு தி ஹேக் நகரில், ஐ.நா. சட்டதிட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் கடந்த 2013–ம் ஆண்டு ஒரு வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்கில் பங்கேற்க சீனா மறுத்து விட்டது.தீர்ப்புஇந்த வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது. அதில், ‘‘சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ‘‘தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் இறையாண்மையை சீனா மீறி இருக்கிறது. செயற்கை தீவுகளை உருவாக்கி பவள பாறைகள் சூழலுக்கு தீங்கு செய்துள்ளது’’ எனவும் கூறப்பட்டுள்ளது.சீன அதிபர் கருத்து.

 

இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ் வரவேற்றது. ஆனால் சீனா நிராகரித்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தது.சீன அதிபர் ஜின்பிங் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால், சீனாவின் இறையாண்மையும், கடல்சார் உரிமைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது’’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுவதை ஒபாமா அரசு உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ள ஹிலாரி கிளிண்டன் தீர்ப்பை வரவேற்றதுடன், ‘‘இந்த தீர்ப்பின்படி சம்மந்தப்பட்ட அனைத்து நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும்’’ எனவும் வலியுறுத்தி உள்ளார்.தைவான் போர்க்கப்பல் அனுப்புகிறது

 

சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் தனது உரிமையை நிலை நாட்டுவதற்கு தைவான் தனது போர்க்கப்பலை அனுப்புகிறது.இதற்கிடையே சீனா ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், ‘‘தென் சீனக்கடலில் சீனாவுக்கு 2 ஆயிரம் ஆண்டு காலமாக வரலாற்றுப்பூர்வமாக உரிமை உண்டு. சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு போட்ட பிலிப்பைன்ஸ்தான் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.வான்பாதுகாப்பு வளையம்

 

இத்தனைக்கும் நடுவில் சீன வெளியுறவு துணை மந்திரி லியு ஜென்மின் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:–எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சர்ச்சைக்குரிய பகுதியில் வான்பாதுகாப்பு வளையம் அமைப்போம். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இதை அமைப்பதற்கான தேவை, எங்களுக்கு வருகிற அச்சுறுத்தலைப் பொறுத்தே அமையும். தென்சீனக்கடல் பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கும், தென் சீனக்கடல் போர் தொடங்கும் இடமாக ஆகாமல் இருப்பதற்கும் சர்வதேச நாடுகள் சீனாவுடன் இணைந்து பணியாற்றும் என நாங்கள் நம்புகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply