சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் பொதுமக்கள் 28 பேர் பலி
சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் அலெப்போ நகரம் உள்ளது. அதை மீட்க சிரியா ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் போர்வையில் அவர்களுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று போர் விமானங்கள் அலெப்போ நகரம் மீது பேரல் குண்டுமழை பொழிந்தது.
அதில் ஒரு குண்டு ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில் கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. ஆஸ்பத்திரி ஊழியர்களும், நோயாளிகளும் காயம் அடைந்தனர்.
பல இடங்களில் இது போன்ற குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்தன. அதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இத்தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது, இக்குண்டுவீச்சில் சிரியா அல்லது ரஷிய போர் விமானங்கள் ஈடுபட்டிருக்கலாம் என கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply