ஸ்ரீலங்கன் விமா சேவை மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது?
இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.இது தேசிய விமான சேவையின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் செயற்பாடு என விமான சேவை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர ஐரோப்பாவின் பாரிஸ் நகர், ரோம், ஜெர்மனியின் ஃப்ராங் ஃபர்ட், பிரித்தானியாவின் லண்டன் நகர் ஆகியவற்றிக்கு நேரடி விமான சேவையை முன்னெடுத்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் ரோம் நகருக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஜெர்மன், ஃப்ராங் ஃபர்ட் நோக்கிய நேரடி விமான சேவையை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நகருக்கான விமான சேவையும் நிறுத்தப்படவுள்ளது.அதன் பின்னர் பிரித்தானியாவின் லண்டன் நகருக்கான நேரடி விமான சேவை மாத்திரமே மீதமாக இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு விமான சேவை மாத்திரமே இடம் பெறுகின்றது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஊக்குவிப்பு அதிகாரி ஒருவரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கி வரும் பின்புலத்திலேயே ஐரோப்பிய வலயத்திற்கான விமான சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற குளறுபடிகள் தொடர்பில் வெளிப்படுத்த ஜே.சி. வெலியமுன அறிக்கையை அரசாங்கம் தற்போது கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply