தாகா தாக்குதல் சம்பவம் பல்கலை. துணைவேந்தருடன் 3 பேர் அதிரடி கைது
வங்கதேச தலைநகரான தாகாவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் கடந்த 1ம் தேதி இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர். இந்நிலையில், தாக்குதலை நடத்தி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, வங்கதேசத்தின் வடக்கு ெதற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் உதீன் ஆசன் மற்றும் அவரது இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்க தனது அடுக்குமாடி குடியிருப்பை அவர் வாடகைக்கு விட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் தீவிரவாதிகள் இவரது அடுக்குமாடி வீட்டில்தான் தங்கியிருந்துள்ளனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த அந்த அடுக்குமாடி பிளாட்டில் கையெறி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply