யாழ் பல்கலை சம்பவம் : ததேகூ கவலை

tnaயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில், கூட்டமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, பல மாணவர்கள் காயமடைந்தமை மற்றும் முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் சிங்கள மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து தாம் வருந்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளின் கீழ் இந்த மாதிரியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெற மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.

அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீண்டும் திரும்பி வந்து தமது கல்வியை தொடர வேண்டும் எனவும் கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவர்களை வரவேற்று, அவர்களது பாதுகாப்பு மற்றும் கல்வி பயிலும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply