வடக்கில் மீள்குடியேற்றம் அமைச்சர்கள் தலைமையில் விசேட செயலணி
வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சர்கள் தலைமையிலான விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி, வடக்கில் சிங்கள மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களில் மீண்டும் சிங்கள மக்களை மீளக் குடியமர்த்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வற் வரி அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஐந்தாம் திகதி விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றது.
இதன்போது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றத் திட்டங்களை ஆராய்வதற்கென விசேட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வாணிப மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமை வகிக்கும் இந்த செயலணியில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, வீடமைப்பு அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களும், நிதி அமைச்சின் செயலாளர் அல்லது நிதி அமைச்சரால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி ஆகியோருடன் மாவட்ட அரச அதிபர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply