இந்திய மத்திய உள்துறை அமைச்சர் மீது பத்திரிகையாளர் பாதணி வீச்சு
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் பாதணி வீசியுள்ளார். இந்திரா காந்தி மறைவின்போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம். ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.
ஆனாலும் சிங் தொடந்து பேசவே, “சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்த முடியாது” என்றார் சிதம்பரம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது பாதணியைக் கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்தப் பாதணி அமைச்சர் சிதம்பரம் மீது படவில்லை. இதேபோன்ற சம்பவம் பாக்தாத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் பாதணி வீசியது பரபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது
வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், “நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன். எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply