பாதயாத்திரைக்கு சு.க ஆதரவு வழங்காது : அமைச்சர் துமிந்த திசாநாயக்க 

duminthaஅரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பாத யாத்திரை”க்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காதென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று தெரிவித்தார். கண்டியிலிருந்து 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு ஸ்ரீ.ல.சு.க. ஆதரவு வழங்குமா? என அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 

அத்துடன் பாதயாத்திரையில் பங்குபற்றுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா? என எழுப்பப்பட்ட  கேள்விக்கு அவர் அது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லையென்றும் சரியான தருணத்தில் இவ்விடயங்கள் கலந்துரையாடப்படுமென்றும் தெரிவித்தார்.

 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும திட்டமிட்டபடி “மக்கள் போராட்ட பாத யாத்திரை” கண்டி தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமாகும் என்றும் கூறியுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply