தென்கொரியாவில் உள்ள அமெரிக்க அணுஆயுத கூடங்களை தாக்கவே ஏவுகணைகளை பரிசோதித்தோம்: வடகொரியா
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணுகுண்டு வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டு வெடித்து உலக அரங்கை அதிர வைத்தது.இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்துள்ளன. ஆனாலும், வடகொரியா அவற்றை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை தனது கிழக்கு கடலோர பகுதியில் ஏவி வடகொரியா பரிசோதித்தது.
வடகொரியா பரிசோதித்துள்ள ஏவுகணைகள் 500 கி.மீ., முதல் 600 கி.மீ. தூரம் வரை சென்றதாகவும், அவை தென் கொரியாவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தவை எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
வழக்கம்போல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் மேற்பார்வையில் இந்த ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், தென்கொரியாவுக்குள் அமெரிக்கா அணுஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ள துறைமுக நகரம் மற்றும் விமானதளங்களின் தூர இலக்கை தாக்கி அழிப்பதற்கான எங்களது புதிய ஏவுகணை சோதனைகள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக வடகொரியா பெருமிதம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை (Terminal High Altitude Area Defence (THAAD) system) ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம் என வடகொரியா மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply