திம்பு தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு
1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகரான திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதனத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகவிருப்பதாக இந்த அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளார். எதிர்வரும் இந்தியத் தேர்தலின் போது இந்தியக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
தமிழக மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேரபிமானம் கொண்டுள்ளார். தமிழக மக்களே எமது பலம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply