தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: திருமாவளவன் கருத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2011-ம் ஆண்டு பதவியேற்றபோது இதே அ.தி.மு.க. அரசால் உறுதியளிக்கப்பட்ட எந்தவொரு திட்டம் குறித்தும் ஒரு வார்த்தையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. புதிய மின் திட்டங்களை உருவாக்குவது பற்றியோ மோனோ ரெயில் திட்டத்தைப் பற்றியோ, முதியோர் இல்லங்களை கட்டித் தருவது பற்றியோ ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி கடும் இழப்புகளைச் சந்தித்து வரும் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தரமான வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு, எந்த அறிவிப்பும் செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சென்னையில் கன மழை பெய்யும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வேதனை அளிக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவு செய்யாத ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கையாக உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply