பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகர தாக்குதலில் பயங்கரவாதிக்கு உதவிய 5 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் கடந்த 14-ந் தேதி இரவு தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்த கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவன் லாரியை மோதி தாக்குதல் நடத்தி, 84 பேரை கொன்று குவித்தது, உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, துனீசியாவை சேர்ந்த முகமது லாகோயேஜ் பவுலெல் என தெரியவந்தது. அவர் தங்களது இயக்க வீரர் என ஐ.எஸ். இயக்கம் அறிவித்தது. அவருக்கு உதவியதாக பிரான்சில் 4 ஆண்கள், ஒரு பெண் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். 22-40 வயதுக்குட்பட்ட அவர்கள் பிராங்கோ, ராம்ஸி, முகமது குவாலித், சோக்ரி, எங்கெல்த்ஜா ஆவார்கள்.
அவர்கள் நேற்று நீஸ் நகர கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் 5 பேரும் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவார்கள் என அரசு வக்கீல் பிராங்கோயிஸ் மாலின்ஸ் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply