மானை வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் விடுதலை
மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.1998ம் ஆண்டு, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட இரு வழக்குகளில், நடிகர் சல்மான் கானுக்கு முறையே ஓராண்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஜஸ்தான் கீழ்நீதிமன்றம், 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், 2007ஆம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply