இன்று மாலை ஜனாதிபதி – கூட்டு எதிர்க் கட்சி சந்திப்பு
கூட்டு எதிர்க் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி செயலகத்தினால் இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றுவரை கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானவர்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் காலத்தை இன்னும் ஐந்து வருடங்களாக நீடிக்க கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது. இது தொடர்பிலும், எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள நடைபவனி பற்றியும் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு பல சந்திப்புக்களை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் செயலக வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply