மலேசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 8 பேர் சாவு; 20 பேரின் கதி என்ன?

Malaysia மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹர் இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் எளிதாக கடல்வழியாக எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறிவிடுகின்றனர். மலேசியாவில் வாழ்ந்து வரும் 20 லட்சம் இந்தோனேசியர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான். அவ்வாறு மலேசியா வந்த இந்தோனேசியர்கள் 62 பேர் மீண்டும் இந்தோனேசியா செல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு படகில் புறப்பட்டனர். ஜோஹர் மாகாணத்துக்கு அருகே சென்ற போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி அந்த படகு கவிழ்ந்தது.

 

நேற்று காலை கப்பலில் ரோந்து சென்ற கடலோர காவல்படையினர் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 34 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் படகில் இருந்த 20 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply