ஹிலரிக்கு ஆதரவாக மிஷேல் ஒபாமா உணர்ச்சிகர உரை ; ட்ரம்ப் மீது கடும் சாடல்
அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை அறிவிப்பதில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஒற்றுமையுடன் இருப்பதற்கு, உணர்ச்சிமிக்க உரை ஒன்றை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆற்றியுள்ளார்.செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸின் ஆதரவாளர்களால் அமளியோடு நடத்தப்பட்டப் போராட்டங்களுக்கு பின்னர் பேசிய மிஷேல், ஹிலாரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை என்று கூறி அமெரிக்க வெளியுறவு செயலாராக அவர் செய்த பணியை புகழ்ந்து பேசினார்.
அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட 140 எழுத்துச் சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே, பிரச்சனைகளை எளிமைப்படுத்திவிட முடியாது என்று ஹிலாரி கிளிண்டனுக்கு தெரியும் என்று பிலடெல்பியாவில் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் மிஷேல் ஒபாமா கூறினார்.
140 எழுத்து அல்லது இட வடிவங்களை மட்டுமே அதிகபட்சமாக அனுமதிக்கும் ட்விட்டரில் செய்தி அனுப்புவதில் மிகுந்த ஈடுபாடு காட்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீதான தெளிவான தாக்குதல் இதுவென கருதப்படுகிறது.அணு ஆயுதங்களை ஏவக்கூடிய சங்கேதத் தரவுகாலை அமெரிக்க அதிபராகப் பதவி வகிப்பவர் விரல்நுனிகளில் வைத்திருக்கும்போது, அவர் திடீரென தீர்மானங்களை எடுத்துவிட முடியாது என்று மிஷேல் கூறினார்.
டிரம்ப் பேசி வருவதற்கு கடும் பதிலடியாக, அமெரிக்கா உயர்ந்தது அல்ல என்றும், மீண்டும் உயர்ந்தது ஆக்கப்பட வேண்டும் என்றும் யாரும் ஒருபோதும் சொல்ல அனுமதிக்க கூடாது என்று மிஷேல் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply