இன்று அவசர காலச் சட்டம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
நாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்; இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. ஐ.தே.க.வும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply