பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிவதே கொல்லப்பட்டோருக்கு நாம் செலுத்தும் கெளரவம்:ஜனாதிபதி
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து ஐக்கிய இலங்கையில் பல்லின மக்களையும் ஒற்றுமையாய் வாழும் சூழலை ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட தலைவர்களுக்குச் செய்யும் உயர்ந்த கெளரவமாகும். அதற்கெதிரான எத்தகைய அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்ட ஒரு வருட காலத்திற்குள் அதற்குக் காரணமான பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடிந்துள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ஜெயராஜ் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வெற்றிகளைக் கண்டு பெருமிதமடைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.
அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சிரார்த்த தினத்தையொட்டி அன்னாரின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய தொகுப்பு நாலும் ஞாபகார்த்த முத்திரைவெளியீடும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
சபாநாயகர் உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த தாவது,
அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை அரசியல் ரீதியாகவன்றி எனது சகோதரனாகவே பார்க்கின்றேன். அரசியல் ரீதியான போராட்டங்களிலும் என்னோடு நெருங்கி செயற்பட்டவர் என அவரைக் குறிப்பிட முடியும்.
அவர் இல்லாத இத்தகைய நிகழ் வொன்றில் நான் உரையாற்றுவேன் என நான் எதிர்பார்த்ததேயில்லை. இது எமது துரதிர்ஷ்டம்.
அவர் இல்லாத போதுதான் அவர் பற்றிய இழப்பு எமக்கு புலப்படுகிறது. நாடு மீளக்கட்டியெழுப்பப்படும் நிலையில் அவரின் வெற்றிடம் உணரப்படுகிறது.
சட்டக் கல்லூரியில் அவருடனான நெருக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் எமது ஊருக்கு வருவார். நாம் யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் சென்றது ஞாபகத்துக்கு வருகிறது.
மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ள அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சவாலுக்கு முகங்கொடுக்கக் கூடிய துணிவு, ஆளுமையுள்ள குரல் ஆகியவற்றின் மொத்த உருவமாக அவர் திகழ்ந்தார்.
பாராளுமன்றத்தில் அனைவரோடும் நெருக்கமும் மிகுந்த அன்பும் கொண்டி ருந்த அவர் 2007 வரவு செலவுத் திட்டத்தின் போது பாராளுமன்றத்தில் மேற் கொண்ட நடவடிக்கை அபாரம். சிலர் கட்சிதாவ முயற்சித்த வேளை சிறந்த தலைவராகவிருந்து செயற்பட்டதை என்னால் நினைவு கூரமுடியும்.
அரசியலில் தீர்மானமெடுக்கும் துணிவு மிக முக்கியமானது. அந்த வகையில் அவ ரது பங்களிப்பு முக்கியமானது. அரசியலில் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சமூக சேவை அளப்பரியது. அவ ரது மரணத்தில் கண்ணீர் செறிந்த ஆயிர மாயிரம் மக்கள் அதற்குச் சான்று. அவர் விட்டுச் சென்ற பணியை அவரது தொகுதி மக்களுக்கு அவரது மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தொடருவார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார, திருமதி சுதர்ஷனி ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply