ஈரான் தளத்தில் இருந்து முதன்முதலாக சிரியா பயங்கரவாதிகள் மீது ரஷியா குண்டுவீச்சு

Airlines Graf சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களை சிரியா மண்ணில் இருந்து ரஷியா நடத்துகிறது. இந்த நிலையில் ரஷியா முதன்முதலாக ஈரான் நாட்டின் ஹமதான் தளத்தில் இருந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ். இயக்கம் மற்றும் நுஸ்ரா முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகளை குறி வைத்து குண்டு வீச்சு நடத்தியது. இந்த குண்டு வீச்சினை ரஷியா ‘டுபோலெவ்–22 எம்3’ தொலை இலக்கு விமானங்கள் மற்றும் சுகோய்–34 போர் விமானங்கள் மூலமாக நடத்தி உள்ளது.

 

ஆனால் இதன் சேத விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

 

இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் தனது பங்களிப்பை ரஷியா விஸ்தரிப்பதையே காட்டுவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இதற்கிடையே ஈரான், ஈராக் வழியாக சிரியாவில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசுவதற்கு ரஷியா அனுமதி நாடி உள்ளதாக மாஸ்கோ கூறுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply