வன்னிக்கு அனுப்பும் அரசின் உதவியிலேயே புலிகளும் உயிர் வாழ்கிறார்கள் உணவை ஆயுதமாக அரசு பயன்படுத்தாது அமைச்சர் டளஸ் அழகப்பெரும

தமிழ் மக்களுக்காக வன்னிப் பகுதிக்கு அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். இந்த உதவியை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது. இவ்வாறு தெரிவித்தார் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும. மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். நான்கு நாட்களுக்குள் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகளை மறைந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply