STF இன் கட்டளைத் தளபதியாக எம். லதீப் – நியமனம் வழங்காமையால் பூஜித்துக்கு சிக்கல்
பொலிஸ்மா அதிபரினால் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானம் ஒன்றை எடுப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீபை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. எனினும் கடந்த
ஓகஸ்ட் மாதம் 09ம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டிய போதிலும் இதுவரை பொலிஸ் மா அதிபரினால் அந்நியமானம் வழங்கப்படவில்லை.
குறித்த விடையம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரவுள்ளதுடன், இன்று இடம்பெற உள்ள கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று ஆரியதாஸ குரே குறிப்பிட்டார்.
அதன்படி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply