வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு: ஜெயலலிதா ரூ.24.55 லட்சம், கருணாநிதி 25 லட்சம்
வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா 24.55 லட்சமும், கருணாநிதி 25 லட்சமும் செலவு செய்துள்ளனர்.2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த கணக்கு விவரங்களை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுத் தொகை ரூ.24.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளனர். உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.16.70 லட்சம் செலவு செய்துள்ளார். திருமாவளவன் ரூ.15.90 லட்சம், அன்புமணி ராமதாஸ் ரூ.19 லட்சம் என தேர்தலுக்கு செலவு செய்துள்ளனர்.
ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply