சீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு

sugiமியான்மரில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி, நாட்டின் வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த ராணுவ அரசு கொண்டு வந்த சட்டத்தினால் அதிபர் பதவி ஏற்க முடியாமல் போன ஆங்சான் சூகி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆங்சான் சூகி அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு பல்வேறு உயர்மட்ட தலைவர்களை சந்தித்த அவர், பிரதமர் லி கெகியாங்குடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிபர் ஜின்பிங்குடன் இன்று (வெள்ளிக்கிழமை) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சூகியின் இந்த சீன பயணத்தின் போது மியான்மரில் 2 மருத்துவமனைகள் மற்றும் ஒரு பாலம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என மியான்மரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த மருத்துவமனைகள் மியான்மரின் யாங்கூன் மற்றும் மண்டலை ஆகிய நகரங்களில் அமைகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply