புத்தர் சிலைகளை அகற்ற முடியாது : சுவாமிநாதன்
தமிழர் தாயகப் பிரதேசத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் சைவ ஆலயங்களுக்கான காணிகளையும், தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் அடாத்தாகப் பிடித்து அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் இன்று கிளிநொச்சிக்கு சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதனிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன், நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளையோ, பௌத்த விகாரைகளையோ அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சனைகள் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply