லிபியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு
மூன்று நாட்கள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு லிபியாவைச் சென்றடைந்தனர்.லிபிய ஜனாதிபதி கேர்ணல் கடாபி பிறந்த ஊரில் விசேட அரச தலைவர்கள் வந்திறங்கவென நிர்மாணிக்கப் பட்டிருக்கும் ‘சேர்டி’ விமானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு நேற்று சென்றது. இக்குழுவினரை லிபிய பிரதமர் கலாநிதி அல் படாதி அலி அல் முஹம்மதி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூஸா முஹம்மத் கோஸா ஆகியோர் வரவேற்றனர்.
இச்சமயம் ஜனாதிபதிக்கு விசேட அரச கெளரவம் அளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இலங்கை அரச தலைவர் ஒருவர் லிபியாவுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
அதனால் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருப்பதுடன், ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்குமிடையிலான இருபக்க பேச்சுவார்த்தை நேற்று மாலை ஆரம்பமானது. இதேநேரம் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு லிபிய பிரதமருடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
லிபிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவுக்கு நேற்றிரவு இராப்போசன விருந்துபசாரமும் வழங்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply