நாளை புலமைப் பரிசில் பரீட்சை, இடைஞ்சல் ஏற்படுத்துவோர் கைது : புஷ்பகுமார
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதாகவும், இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையம் மற்றும் பரீட்சை நிலையம் என்பவற்றை கண்காணிப்பதற்கு பரீட்சைத் திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பவற்றின் அதிகாரிகள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.
அனுமதியின்றி எந்தவொரு நபரும் பரீட்சை நிலையத்துக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படும் எவரையும் கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 2989 பரீட்சை நிலையங்களில் நாளை நடைபெறவுள்ள இப்பரீட்சையில் 350701 பரீட்சார்த்திகள் தோற்றுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply