கட்சியின் 65 ஆம் விழாவுக்கு வராவிடின், கட்சியிலிருந்தும் நீக்கப்படும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கட்சியின் எதிர்வரும் 65 ஆவது வருட விழாவில் கலந்துகொள்ளாது போனால் அவர்களின் கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் 65 ஆவது வருட நிறைவு விழாவுக்கு அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்களா? இல்லையா? என்பது குறித்து கட்சி அவதானமாக இருப்பதாகவும், அவர்கள் சிலபோது சமூகமளிக்காதிருந்தால் அவர்களது கட்சி உறுப்புரிமை நீக்கப்படும் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply