எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது

RANILசர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் இரு தசாப்தங்களில் இலங்கை, உயர்ந்த வருமானம் பெறும் ஒரு நாடாக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நிலையான தேசிய அபிவிருத்திக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் புதிய உற்பத்திகளையும் பயன்படுத்தல்’ என்ற எண்ணக்கருவுடனான, விஞ்ஞான தொழில்நுட்ப மாநாடு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு மிக அவசியமானது. இலங்கை வரலாற்றில் ஒரு புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சகல துறையினரையும் உள்வாங்கி, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply