அமெரிக்காவில் 12 வயது சிறுமிக்கு சித்ரவதை: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி, சீத்தல். இந்த பெண், தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகள் மாயாவை பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார்.ஒரு முறை அந்த சிறுமியை அவர் செருப்பு அணிந்த காலால் முகத்தில் எட்டி உதைத்து காயப்படுத்தி உள்ளார்.இரண்டாவது முறை மரத்தடியால் கன்னத்தில் தாக்கி உள்ளார். அதில் அந்த சிறுமியின் இடது புற கன்னம் வீங்கியது. சிராய்ப்புக் காயமும் ஏற்பட்டது.
உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லை, எடை குறைவாக உள்ளார் என கூறி இருக்கிறார்.அடுத்த முறையோ சிறுமியை உடைந்து போன துடைப்பத்தின் உலோக கைப்பிடியால் சீத்தல் தாக்கி இருக்கிறார். இதில் சிறுமியின் இடது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இப்படி ஒன்றரை ஆண்டுக்கு மேலாக அந்த சிறுமியை சித்தி சீத்தல் சித்ரவதை செய்தார். பட்டினி போட்டு கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது குயின்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது. அவர் மீதான குற்றச்சாட்டு அங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ரிச்சர்டு பச்டர் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.தனது மகளை சித்தி கொடுமை செய்வதற்கு துணை போன குற்றச்சாட்டு தொடர்பாக ராஜேஷ் மீது தனியாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply