TNA யுடன் கூட்டுச் சேர்வதில் பிரச்சினையில்லை- W.D.J. செனவிரத்ன
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு உடன்படுவதாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் கூட்டுச் சேர்வதில் பிரச்சினைக்குரியதொன்று அல்லவென சிரேஷ்ட அமைச்சர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். இனவாத சிந்தனைப் போக்கு கொண்ட அரசியல் கட்சியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேர்வதற்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்வரும் தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கும் என மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தமை குறித்து அவரிடம் வினவப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும், ஸ்ரீ ல.சு.க. யின் கொள்கைக்கு உடன்பட்டு த. தே.கூ. கூட்டுச் சேர்வதாயின் வரவேற்கத்தக்கது.
கம்மம்பில போன்றவர்கள் குறிப்பிடும் கருத்தை வைத்துப் பார்க்கும் போது, இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் என்பது ஏற்பட முடியாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply