வடகொரியா மேலும் ஒரு அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது தென்கொரியா திடுக்கிடும் தகவல்

north0139167701_North-Korea-tested-missiles-and-2-One-failed-the-other_SECVPFவடகொரியா மேலும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக தென்கொரியா திடுக்கிடும் தகவல் வெளியிட்டு உள்ளது. வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

 

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 

வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

 

 

 

இந்த நிலையில், வடகொரியா மற்றொரு அணுகுண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாக தென்கொரியாவின் பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

இது குறித்து தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மூன் ஜாங் கூறுகையில், ‘‘தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகளின்படி வடகொரியாவின் புங்கியே–ரி என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத சோதனை தளத்தில் அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக தெரிகிறது’’ என தெரிவித்தார்.

 

மேலும் அவர், அந்த இடத்தில் வடகொரியா ஒரு சுரங்கப்பாதை அமைத்து உள்ளதாகவும், அங்கிருந்து அணுகுண்டு சோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

இதற்கிடையே, வடகொரியாவின் வெளியுறவுத்துறை மந்திரியும், அந்நாட்டின் முன்னாள் அணுசக்தி உடன்பாட்டு பேச்சுவார்த்தையாளருமான ரி யாங் ஹோ சீனா சென்றிருப்பதாக ஜப்பானின் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

 

வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவது குறித்த தகவலை அறிந்த அமெரிக்கா, தனது நட்பு நாடான தென்கொரியாவுக்கு பி–1பி ரக அதிநவீன போர்விமானத்தை அனுப்பி பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்து உள்ளது.

 

தொடர்ந்து அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு மேலும் பல்வேறு தடைகளை விதிக்கவேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தி உள்ளன. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதற்கான தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

 

 

 

இதற்கிடையே, வடகொரியா அணுகுண்டு சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருவதற்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருப்பதை சீனா மறுத்து இருக்கிறது.

 

இது தொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ், தனது நேற்றைய தலையங்கத்தில், ‘வடகொரியா அணுசக்தி தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்தும்படி சீனாவால் வற்புறுத்த முடியாது. ஏனென்றால் சீனாவின் முயற்சிகளை எந்த நாடும் ஆதரிப்பது இல்லை. வடகொரியாவுடன், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காதான் மறுத்து வருகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply