காஷ்மீரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 10 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்

kasmeerகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டது.80 நாட்களாக பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பக்ரீத் திருநாளான இன்றும் பன்டிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பக்ரீத் நாளான இன்று மார்க்கெட் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது. இனிப்பு கடைகளும், பேக்கரிகளும் மூடப்பட்டு இருந்தது.

ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஸ்ரத் பால் வழிபாட்டு தலத்தில் தொழுகை நடைபெறவில்லை. ஆங்காங்கே உள்ளூரில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply