தமிழீழத்தை உருவாக்கும் முயற்சிகள் சர்வதேச ரீதியில் தீவிரமாம் :கம்மன்பில
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரால் சாதிக்க முடியாத விடயங்களை சாதிப்பார்கள் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்க ட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் சர்வதேச ரீதியாக தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில “60 மாதங்களில் புதிய நாடு ஒன்றை உருவாக்குவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் ஆணையை பெற்றுள்ளது. புதிய நாடு ஒன்றை உலகத்துடன் இணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம். டென்மார்க்கில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு ஒன்று உருவாகியுள்ளது.
அந்த நாட்டில் வீசா உள்ளிட்ட சில விடயங்களுக்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களின்போது தங்களது தேசிய இனம் தொடர்பிலான தெரிவில் தமிழ் ஈழம் என்ற விடயத்தை குறித்துக்காட்டக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் இனங்களின் தேசியத்தை குறிப்பிடும் இடத்திலும் இலங்கையுடன் சேர்த்து தமிழ் ஈழம் என்ற நாடும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அங்கு வாழும் இலங்கை பிரஜைகளால் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன.
ஒரு நாடு உருவாவதற்கு நிலம் காணப்படாவிட்டாலும் அதனை ஏனைய நாடுகள் ஏற்று க்கொள்வது மிகமுக்கியம். பலஸ்தீனத்திற்கென ஒரு நிலப்பகுதி காணப்படா விட்டா லும் ஒரு நாடு என்ற வகையில் அதனை சர்வதேசம் ஏற்றுக்கொண்டது. பின்னரே அங்கீகாரம் கிடைத்தது.
அந்த அடிப்படையிலேயே நாடுகடந்த தமிழீழம் என்ற ஒன்றை உருவாக்கி ருத்திரகுமார் அந்த நாட்டின் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்காவில் உள்ளவர்களுக்கு தெரியா விட்டாலும் தமிழீழம் உருவாகிவிட்டது.
எங்களுக்கு தெரியாமல் உலகம் முழுவதும் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் மௌனமாக இருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பாலசிங்கத்தால் முடியாமல் போனதை, சம்பந்தனும் விக்னேஸ்வரனும் சாதிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்பு கிறோம்.“எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply